சூர்யா நடிப்பில் வெளியான 7-ம் அறிவு படத்தில இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் வந்த ஒரு விமர்சித்து வந்த வசனம் இருந்தது. அப்போது எனக்கு அவ்வளவாக அரசியல் புரிதல் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் 7-ம் அறிவு. சூர்யா, ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். போதி தர்மன் என்ற ஒரு தமிழரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம், ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நாயகி ஸ்ருதிஹாசன் இடஒதுக்கீட்டால் திறமையானவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்று பேசியிருப்பார். இந்த வசனத்தை அப்போது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம் மற்றுமு் அந்த காட்சியின் தீவிரம் புரியாமல் தான் இருந்ததாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், 7-ம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசன் சமூகநீதியை விமர்சித்து பேசும் ஒரு வனம் இடம்பெற்றிருந்தது. அந்த சமயத்தில் எனக்கு அரசியல் புரிதல் இல்லை. அதற்காக நான் இயக்குனர். ஏ.ஆர்,முருகதாஸை குறை சொல்லவில்லை.
தனது அரசியல் புரிதலின் காரணமாக இயக்குனர் அந்த வசனத்தை வைத்திருப்பார். படப்பிடிப்பிலும் இந்த வசனத்தையுயோ சீன் பேப்பரையோ நான் பார்க்கவில்லை. அந்த காட்சி படமாக்கப்படும்போது சூர்யாவும் அங்கு இல்லை. டப்பிங்கின்போதும் அப்படி ஒரு வசனம் வருகிறது என்பது சூர்யாவுக்கு தெரியாது. படம் ரிலீசுக்கு முன்பாக படத்தை பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்து படத்தில் இடஒதுக்கீட்டை விமர்சிப்பது போல் ஒரு வசனம் உள்ளது அதை எடுத்துவிடுங்கள் என்று சொன்னார்.
ஆனால் நான் வசனம் தானே விட்டுடுங்க என்று சொன்னேன். அந்த சமயத்தில் என் அரசியல் புரிதல் அவ்வளவுதான். ஆனால் சூர்யாவுக்கு அப்போதே அரசியல் புரிதல் இருந்துள்ளது. இப்போது அதை யோசித்தால் சூர்யா சொன்னதை நான் அப்போதே செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த வசனத்தை படத்தில் இருந்து எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“