அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற “இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் தான் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படமும் அதே போல ரசிகர்களை அசத்தியதா என்பதை இவ்விமர்சனதில் கானாலாம்.
கதைக்களம்:
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் உதயநிதி தன்னுடைய காதலியின் அப்பாவால் ஏற்பட்ட பிரச்சனையால் பழைய வீட்டை காலி செய்து விடுகிறார். புதிய வீட்டை தேடி அவரும்,அவருடைய நண்பரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அப்போது ஒரு வீட்டில் ஸ்ரீகாந்துடன் ரூம் மேட் ஆகிறார் உதயநிதி. அன்று இரவு அனைவரும் குடிப்பதற்காக பாருக்கு செல்ல,அங்கு பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது அதை பார்க்கும் உதயநிதி பூமிக்காவை அவரது வீட்டில் விட்டுவிட்டு,அவரின் காரை எடுத்து வருகிறார். மறுநாள் காலையில் பூமிக்காவிடம் அந்த காரை கொண்டு சேர்ப்பதற்காக செல்ல, பூமிகா தான் ஓட்டி வந்த காரிலேயே பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது ? அந்த கொலையாளி யார்? என்பதை திரில்லிங்காக சொல்லி இருக்கும் படமே “கண்ணை நம்பாதே”
நடிகர்களின் நடிப்பு:
ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் உதயநிதி. சில இடங்களில் அவரது முகபாவனையே நமக்கு பயத்தை வரவழைக்கிறது.அது மட்டுமல்லாமல் ஸ்ரீகாந்த்,பூமிகா என இருவரும் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக வரும் ஆத்மிகாவும் கொடுக்கப்பட்டிருக்கும் ரோலுக்கேற்றவாரு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.
இயக்கம் மற்றும் இசை:
திரில்லர் ரசிகர்களுக்கு பிடித்தமான நல்ல கதைக்களத்தை அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர். பல இடங்களில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் படத்தின் திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றவாறு அமைந்திருப்பது காட்சிகளை மேலும் ரசிக்க உதவுகிறது.
பாஸிட்டிவ்ஸ்:
*நடிகர்களின்(திரில்லர் கதைக்களத்திற்கு தேவையான)எதார்த்த நடிப்பு.
*முதல் பாதியில் வரும் பல திருப்பங்கள், அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத வகையில் எழுதப்பட்டிருக்கும் வலுவான திரைக்கதை.
*மிரட்டலான இசை.
நெகடிவ்ஸ்:
*இரண்டாம் பாதியில், சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங்.
*கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் சிறந்த முறையில் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் திரில்லர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலான ஒரு நல்ல திரைப்படம்.
*Overall – A Decent Thriller Movie.
*Marks – (2.75/5)💥💥💥
A Review By
Naveen Kumar
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“