2 வருட காத்திருப்பு… டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா திருமண கோலாகலம்- படங்கள்

தமிழ் சினிமாவின் நடிகைச்சுவை நடிகர் மற்றும் டப்பிங் கலைஞரான எம்.எஸ் பாஸ்கரின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை குணச்சித்திரம் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர் எம்எஸ் பாஸ்கர். இவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கர். டப்பிங் ஆர்டிஸ்டான இவருக்கும் தொழிலதிபரான என்.ஏ.சுதாகரின் மகன் அகுல் சுதாகருக்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நடைபெற்றதை தொடர்ந்து இன்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இந்த திருமணத்திற்கு மேலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யாவும் அகுலும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக இருந்ததாகவும், தற்போது அவர்கள் திருமண வாழ்கையில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான நலாங்கு, மெஹெண்டி விழாக்கள் சமீபத்தில் நடந்தன, இந்த நிகழ்வில், இரு குடும்பங்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்பட்ங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறர். ஐஸ்வர்யா மற்றும் அகுல் சுதாகர் ஆகியோருக்கு கடந்த 2019 ஜூன் மாதம் ஒரு பிரமாண்டமான நிகழ்வில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கோவிட் 19 தொற்று காரணமாக இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா பாஸ்கர். செல்வராகவன் இயக்கிய சூரியா நடித்த என்.ஜி.கே படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்தார். மேலும் சமீபத்தில் தமிழில் வெளியான கார்த்தியின் சுல்தான் படத்தில், ரஷ்மிகா மந்தண்ணாவுக்கு டப்பிங் செய்தார். இந்த படத்தில், ரஷ்மிகாவுக்கு ஐஸ்வர்யாவின் டப்பிங் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபல வெப் தொடரான ​​மனி ஹீஸ்டின் தமிழ் பதிப்பிற்கும் ஐஸ்வர்யா டப்பிங் செய்துள்ளார்.

நெட்ஃபிக்ஸ் இயங்குதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யும் மனி ஹீஸ்டின் தமிழ் பதிப்பில் டோக்கியோவின் கதாபாத்திரத்திற்காக ஐஸ்வர்யா டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் தவிர, ஈஸ்வர்யா சில குறிப்பிடத்தக்க குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஐஸ்வர்யா பாஸ்கரின் சகோதரர் ஆதித்யா பாஸ்கர், அவர் வளர்ந்து வரும் நடிகர். விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்த 96 இல் இளைய ராமாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனனின் நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி பிரிவான பாவா கதைகலில் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema update actor ms baskar daughter marriage today

Next Story
சினிமாவில் நுழைந்த மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்: யாரு படம்னு பாருங்க!vijay tv, bharathi kannamma serial, akil got chance to act in cinema, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா, அகில், ரிஷிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு, பஹிரா, பிரபுதேவா, rishi got chance to act cinema, rishi got cinema chance in prabhu deva movie, bagheera movie, tamil cinema news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com