நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் மரணம்

Actor Theepetti Ganesan Death : நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Cinema Actor Theepettu Ganesan Death : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகரான தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் இன்று மரணமடைந்தார்.

தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன் (கார்த்திக்). அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று, விக்ரமுடன் ராஜபாட்டை, அஜித்தின் பில்லா-2, நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், கடந்த 2019-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார்.

பெரும்பாலும் எதார்த்த இயக்குநர் சீனு ராமசாமி படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை இதய அஞ்சலி கணேசா.. என பதிவிட்டுள்ளார்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும்திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema update actor theepetti gansan death in madurai

Next Story
கீர்த்தி சுரேஷின் முதல் முயற்சி… தம்பியுடன் செம ஆட்டம்keerthy suresh dance viral video, keerthy suresh, keerthy suresh dancing with her brother, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் நடனம், கீர்த்தி சுரேஷ் டான்ஸ், கீர்த்தி சுரேஷ் தம்பியுடன் செம டான்ஸ், வைரல் வீடியோ, actress keerthy sruehs, viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express