முகம் வீக்கம்; ஆளே அடையாளம் தெரியலை: பிக் பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு?

மருத்துவர் எனக்குத் தேவையில்லாத ஒரு ஒருசில கிரீம்களை பயன்படுத்துமாறு என்னை கட்டாயப்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன் சமீபத்தில் முகத்தில் சிகிச்சை செய்துகொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் வேலையில்ல பட்டதாரி 2, பியர் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே வர்மா ஆகிய படங்களில் நடித்தவர் ரைசா வில்சன். தொடர்ந்து எப்ஐஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வரும் இவர்,  தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு புகழ்பெற்றார். மாடலிங் நடிப்பு என தற்போது பிஸியாக இருக்கும் ரைசா சமீபத்தில், தனது முகத்தில் சாதாரண சிகிச்சை செய்துகொள்வதற்காக மருத்துவர் ஒருவரிடம் சென்றுள்ளார்.

பைரவி செந்தில் என்ற அந்த மருத்துவர் ரைசாவை வற்புறுத்தி தேவையில்லாமல் அவரது முகத்திற்கு ஒரு சில கிரீம்களை வைத்து சிகிச்சை செய்துள்ளார். அதன்பின் ரைசாவின் கண்ணுக்கு கீழ் வீங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அந்த மருத்துவரை தொடர்புகொண்போது சரியான பதில் இல்லை என்றும், அவரை மீண்டும் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ள ரைசா, அவர் ஊரில் இல்லை என மருத்துவமனையில் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரைசா, ஒரு எளிய முக சிகிச்சைக்காக நேற்று பைரவி செந்தில் மருத்துவரை பார்க்க சென்றேன்,. அப்போது அந்த மருத்துவர் எனக்குத் தேவையில்லாத ஒரு ஒருசில கிரீம்களை பயன்படுத்துமாறு என்னை கட்டாயப்படுத்தினார். அதை பயன்படுத்தியதால் என்முகம் இப்படி ஆகிவிட்டது. இது தொடர்பாக அவரை சந்திக்க சென்றபோது, என்னை சந்திக்கவோ அல்லது பேசவோ மறுத்துவிட்டார். மேலும் அவர் வெளியூருக்கு சென்று இருப்பதாக ஊழியர்கள் சொன்னார்கள் ‘ என குறிப்பிட்டு உள்ளார். மேலும் இதே மருத்துவரால் பாதிக்கப்பட்ட பலரும் தனக்கு அதிகம் அளவு மெசேஜ் செய்து வருவதாக ரைசா கூறி இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema update actress raisa wilson face treatment wrong

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com