மதம்… அரசியல்… நையாண்டி..! ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு தடை ஏன்?

Tamil Cinema Update : சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள ஆன்டி இந்தியன் படத்திற்கு சென்சார் குழு தடை விதித்துள்ளது.

Tamil Cinema Update Blue Sattai Maran’s Film : திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியிருக்கும் ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்துக்கு சென்சார் குழுவினர் தடை விதித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் படங்களை யூடியூபில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் பலரது விமர்சனங்கள் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒரு சிலரின் விமர்சனம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறை பிரபலங்களையும் கோபத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அந்த வகையில், தமிழில் வெளியாகும் அனைத்து படங்களையும் தனது நையாண்டி வார்த்தைகளால் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து பிரபலமானவர் ப்ளு சட்டை மாறன்.

தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் தனது விமர்சனத்தை வெளியிடும் இவர், பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் கடுப்பான சினிமா பிரபலங்கள் சிலர் எல்லா படத்தையும் கடுமையாக விமர்சிக்கிறீங்க. நீங்க ஒரு படம் எடுங்க அந்த படம் எப்படி இருக்குனு பார்ப்போம் என்று சவால் விடுத்துள்ளனர். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட மாறன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.  ஆன்டி இந்தியன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து ப்ளுசட்டை மாறன் இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாகும் என்று மாறன் தனது யூடியூப் சேனலில் அறிவித்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 5ந் தேதி இத்திரைப்படத்தை இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்திற்கு தடை விதித்துள்ளனர்.  இது குறித்து தயாரிப்பாளர் ‘மூன் பிக்சர்ஸ்’ ஆதம் பாவா கூறுகையில் ‘சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி ‘ஆன்டி இந்தியன்’ படம் திரைக்கு வரும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுவாக படங்களில், ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். இந்த முறையில் சமீபத்தில் அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது ஆன்டி இன்டியன் படம் இந்த சிக்கலில் சிக்கியுள்ளது.  சென்சார் குழுவினர் இந்த படத்திற்கு தடை விதித்தாலும், மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட ஆன்டி இந்தியன் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema update blue sattai maran anti indian movie cencer team banned

Next Story
கேப்டன் கோலியை தூக்கி கெத்து காட்டிய அனுஷ்கா ஷர்மா; வைரல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com