தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மாபெரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. 90-களில் குழந்தைகளின் பிடித்தமான முன்னணி நகைச்சுவை நடிகரான இவர், செந்திலுடன் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்னும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில், ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் விஜய், அஜித்என பல முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள கவுண்டமணி, கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 49 ஓ மற்றும் வாய்மை என்ற இரு படத்தில் நடித்திருந்தார். இந்த படங்கள் சரியாக கோவில்லை என்றாலும், கவுண்டமணியின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது கூட, தமிழ் பல நட்சத்திரங்கள் அவருடன் நடிக்க விரும்புகிறார்கள். ஆனால் தற்போதைய நடிகர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது கவுண்டமணியின் பழமையான புகைப்படம் வைரலாகி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கவுண்டமணியுடன் இருக்கும் இரு குழந்தைகள் யார் என்று இணையத்தில் கேள்விகள் எழும்பி வரும் நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகர் சத்யராஜின் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் சிபிராஜ் மற்றும் திவ்யா சத்யராஜ் ஆகியோர் குழந்தை பருவத்தில் இருந்த போது கவுண்டமணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை சத்யராஜின் மகள்,திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சத்யராஜும், கவுண்டமணியும் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”