எங்கேயோ போயிட்டீங்க புகழ்..! முக்கிய நடிகர் படத்தில் ஒப்பந்தம்; குவியும் வாழ்த்து

Tamil Cinema Update : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ்-க்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Tamil Cinema Update VJS56 Cook With Comali Pughal : பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம், அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள புகழ், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குநர் பொன்ராம் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதியின் 46-வது படமான இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இது தொடர்பாக VJS 46 என்ற தலைப்பில் ஒரு சிறிய வீடியோ வெளியிட்டு இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது. இந்த வீடியோவில், போலீஸ் ஜீப் மீது தொப்பி, வாக்கி டாக்கி இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த படத்தில் விஜய் சேதுபதி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாப்பரத்தில் புகழ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் புகழ் அடுத்துத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவது குக் வித் கோமாளி, மற்றும் புகழ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema update cook with comali pughal committed vjs46

Next Story
டிஆர்பி போட்டியில் முந்திய சன் டிவி: இந்த சீரியல்தான் நம்பர் 1sun tv, roja serial, roja serial first place, சன் டிவி, ரோஜா, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா, ரோஜா சீரியல் முதல் இடம், பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் இடம், vijay tv, bharathi kannamma serial second place, roja, bharathi kannamma, trp ratting
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express