Tamil Cinema Update Cook With Comali Pughal In Simbu Manadu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை புகழ் தற்போது சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்துள்ளார்.
விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்றவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் இவர் செய்யும் அட்ராசிட்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இவரின் காமெடி காட்சிகளுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் புகழ் வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் காரணமாக அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்து குவிகின்றன. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து வரும் படத்தில் புகழ் வாய்ப்பு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்திலும் நடிக்க புகழ் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில், ரஜினிகாந்த நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக புகழ் மேலும ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து அவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஒரு பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் புகழ் இணைந்துள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து வரும் இந்த மாநாடு படத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரேம்கி முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் மற்றும் பலருடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், இப்படத்தை சுரேஷ் காமாச்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil