கார்த்தி ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் ரெமோ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் படம் சுல்தான். இன்று வெளியான இந்த படம் எப்படி இருக்கு?
சேலம் அருகே ஒரு கிராமத்தில் ரவுடி கும்பலுக்கு தலைவனாக இருக்கும் நெப்போலியன். அவரது மனைவி குழந்தை (கார்த்தி)பிறந்தவுடன் இறந்து விடுகிறார். இதனால் கார்த்தி சிறுவயதில் இருந்தே ரவுடி கும்பலின் அரவனைப்பில் வளர்கிறார். நாளடைவில் படிப்பிற்க்காக வெளியூர் செல்லும் கார்த்தி, ஒரு சில வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக ஊர் திரும்புகிறார். அதன்பிறகு நிகழும் ஒரு சம்பவத்தில் கார்த்தியின் அப்பாவான ரவுடி கும்பலின் தலைவன் நெப்போலியன் இறந்துவிட, அவரது ரவுடி கூட்டத்திற்கு கார்த்தி தலைவனாகிறார்.
ஆனால் ரவுடி கும்பலை எண்கவுண்டர் செய்ய போலீஸ் தரப்பு தயாராகி வருகிறது. இதற்கிடையே போலீஸை சந்தித்து பேசும் கார்த்தி அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை கேட்கிறார். அதற்கு போலீசார் தரப்பில் 6 மாதங்களுக்கு அவர்கள் மீது எந்த கேசும் பதிவாக கூடாது கெடு விதிக்கப்படுகிறது. இதற்கிடையே பக்கத்து கிராமத்தில் இருந்து வரும் ஊர் பெரியவர்கள் தங்களது கிராமத்தில் ரவுடி ஒருவர் அட்டூழியம் செய்வதாகவும், அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறும் கேட்கிறார். இதனால் அவர்களை காப்பாற்ற கார்த்தி முடிவு செய்கிறார்.
ஆனால் 6 மாத்ததிற்கு ரவுடி கும்பல் எந்த தவறும் செய்யக்கூடாது என்பதால், கார்த்தி அந்த கிராமத்தை எப்படி காப்பாற்றினார்? ரவுடி கும்பலின் நிலை என்ன என்பதே இந்த படத்தின் மீதி கதை. வித்தியாசமாக கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது மீண்டும் ஒருமுறை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராஷ்மிகா மந்தனாவுடன் காதல், ரவுடி கும்பலை வன்முறையில் இறங்க விடாமல் பாதுகாப்பது, தொடக்கத்தில் காமெடி போக போக ஆக்ஷன் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிலும் பல படங்களில் ஜிம் பாய்ஸ்களாக வரும் நடிகர்களுக்கு ஹீரோவுடன் பயனிக்கும் அளவுக்குதான் நடிப்பு இருக்கும். ஆனால் இந்த படத்தில் ரவுடி கும்பலை வைத்து கார்த்தி விவசாயம் செய்யும் காட்சிகள் கைதட்டலை பெறுகிறது.
நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே செம திமிரு என்ற டப்பிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானலும் தமிழில் நேரடியாக நடித்த முதல் படம் இதுதான். தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா, அந்த கொண்டாட்டங்களுக்கு தான் தகுதியானவர் தான் என்பதை நிருபிக்கும் அளவுக்கு நடித்துள்ளார். கிராமத்து பெண்ணாக இவர் கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முக்கியமாக கார்த்தியின் அப்பாவாக வரும் நெப்பொலியன், அவரது நண்பராக வரும் லால் இருவரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். யோகி பாபு, செண்ராயன், சதீஷ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சத்ய சூரியன், இசையமைப்பாளர் விவேக் மெர்வின், பின்னணி இசை கொடுத்த யுவன் சங்கர் ராஜா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். எடிட்டர் ரூபன் ஆக்ஷன் கட்சிகளை அருமையாக கட் செய்துள்ளார்.
படத்தில் துணை நடிகர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் திறம்பட வேலைவாங்கிய இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கு பாராட்டுக்கள். ஆனால் இந்த படத்தின் நீளம், மற்றும் தேவர்மகன், விருமண்டி, உள்ளிட்ட கமல்ஹாசன் படங்களின் கட்சிகள் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. கார்ப்ரேட் வில்லன், இயற்கை விவசாயம், என் சமீபத்தில் வெளியான பூமி படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்கமுடியவில்லை. அதிலும் படத்தின் நீளம் ரசிகர்களை விரக்தியடைய வைக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil