நயன்தாரா மார்க்கெட் முடிஞ்சு போச்சா? தமிழில் காஸ்ட்லி நடிகை ‘அண்ணாச்சி’ ஜோடிதானாம்!

Legend Saravana Movie Actress : தமிழில்லெஜண்ட் சரவணா நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெவ்டிலா சம்பள விபரம்

Tamil Cinema Update Legend Saravana Pair Urvashi Rautela : தமிழில் லெஜண்ட் சரவணாவுக்கு ஜோடியாக நடித்து வரும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரெவ்டிலா, முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஊர்வசி ரெவ்டிலா. அதனைத் தொடர்ந்து சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, பகல்பந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், தற்போது,  லெஜண்ட் சரவணா நடித்து வரும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், இதில் அறிவியல்  நுண்ணுயிரியலாளர் வேடத்தில் ஊர்வசி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்காக ஊர்வசி  10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்று ஊர்வசிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.  இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக ஆலியா பட் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஊர்வசி ரெவ்டிலா நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்த தீபிகா படுகோனே இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு ரூ .3 கோடி சம்பளம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ஊர்வசி ரெவ்டிலா அதிக சம்பளத்துடன் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இதன் மூலம் தமிழில் முன்னணி நடிகையான நயன்தாராவை இணையாக சம்பளம் பெறும் ஊர்வசி, விரைவில் அவரை முந்தி செல்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஊர்வசி பிளாக் ரோஸ் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema update legend saravana movie actress urvashi rautela

Next Story
காது, முகம் வீங்கிய பார்த்திபன்… வாக்களிக்க வராத காரணம் இதுதான்!actor parthiban, நடிகர் பார்த்திபன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X