Tamil Cinema Update Legend Saravana Film : தமிழ் திரையுலகில் நாயகன் அவதாரம் எடுத்துள்ள சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் புதிய படத்தின் ரொமான்ஸ் கட்சிகள் வெளியாகியுள்ளது.

தனது கடைகளின் விளம்பரப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர் அருள், தற்போது திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகும் படத்தை தமிழில் உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி ஆகியோர் இயக்கி வருகின்றனர்.
அதிரடி ரோலில் சரவணா ஸ்டோர்ஸ் அருள்: வைரல் போட்டோஸ்

2019ம் ஆண்டு இறுதியில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தனர்.

நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில், ஊர்வசி ரவுத்தேலாநாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் கட்சிகள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
அதிரடி ரோலில் சரவணா ஸ்டோர்ஸ் அருள்: வைரல் போட்டோஸ்

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ரொமான்ஸ் கட்சிகள் குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மணலியில் நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”