பவர் ஸ்டாருடன் 3-வது திருமணம்… பங்களா… பேய்… மிரட்டலான வேடத்தில் வனிதா!

Tamil Cinema Update : வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் நடித்து வரும் பிக்கப் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Tamil Cinema Pickup Movie Update : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். 90 காலகட்டத்தில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த இவர், சமீப வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்ற இவருக்கு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், குக் வித் கோமாளி முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றார்.

தற்போது இவருக்கு படவாய்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரஷாந்துடன் அந்தகன், 2கே அழகான காதல், என ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் சீனிவாசனுடன் இணைந்து பிக்கப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக பவர்ஸ்டாருடன் திருமணம் செய்துகொண்டது போன்ற புகைப்படத்தை வனிதா தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர் அடுத்து பவர்ஸ்டாரை திருமணம் செய்துகொண்டாக ரசிகர்கள் விமர்சனம் செய்த நிலையில், அது படத்தின் போஸ்டர் என்று வனிதா விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் நடித்து வரும் ‘பிக்கப்’ படம் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  இப்படத்தில்  பவர்ஸ்டாரை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ளும் வனிதா ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார். அந்த பங்களாவில், பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள ‘இப்படம் தனக்கு நூறாவது படம் என்றும், என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema update vanitha and powerstat pickup movie update

Next Story
தடை உடைந்தது: சீறி வரும் வடிவேலு; ஒரே நிறுவனத்தில் 5 படங்கள் ஒப்பந்தம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com