Tamil Cinema Update Vanitha Vijayakumar Committed 4-th Movie : தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியான வனிதா விஜயகுமார் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர், கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்கமால் இருந்த அவர், தொலைக்காட்சி ஷோக்களில் கலந்துகொண்டார். தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது. இதில் பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று படத்தில் நடித்து முடித்துள்ள வனிதா, தொடர்ந்து ஹரி நாடார் தயாரித்து, ஹீரோவாக நடித்து வரும் 2கே அழகானது காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வனிதா நெகட்டீவ் வேடம் ஏற்றுள்ள இந்த படத்தில் பிரஷாந்த் நாயகனாகவும், சிம்ரன் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் இந்த படத்தை இயக்கி வருகிறார். அடுத்துத்து 3 படங்களில் வனிதா கமிட் ஆகியுள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக வனிதா 4-வது படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
கைதி, மாஸ்டர் படத்தில் நடித்து புகழ் பெற்ற அர்ஜுன் தாஸை வைத்து இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், சமீபத்தில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருக்கும் வனிதா, தனது ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாப்பிங் ஃப்ரம் ஹோம் என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில், விதவிதமாக டிரெஸ் வாங்கி குவித்துள்ள வனிதா, அந்த ஆடைகளை ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி உடுத்தி நடனமும் ஆடியுள்ளார். அதனை பார்த்த பலர் க்யூட் என்று கூறிய போதும் சிலர் என்ன ஆச்சு உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க என்று கேட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"