திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற வாழை திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி கடுமையாக விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தியேட்டரில் வெளியானபோது யாருமே கண்டுகொள்ளாத போகுமிடம் வெகுதூரமில்லை படம் சிறப்பாக வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்து கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து வாழை என்ற படத்தை இயக்கினார். வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்களை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் படத்தை தயாரித்திருந்தார்.
வாழை திரைப்படம் பதிவு செய்த சிவனைந்தன் பூங்கொடி உறவு கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!
— Kotravai (கொற்றவை) (@kotravai_n) October 20, 2024
மாரி செல்வராஜ் இதை செய்திருக்கக் கூடாது! #Vaazhai #mariselvaraj pic.twitter.com/X4MUFoO12I
இந்த படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இயக்குனர் பாலா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் திரையிடப்பட்டு அவர்களின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதன்பிறகு திரையரங்குகளில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். முதல்வர் ஸ்டாலின் கூட படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். வாழை படத்துடன் கொட்டுக்காளி படமும் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
திரையரங்குகளில் வாழை வசூல் வேட்டை
திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெற்று வசூல் வேட்டை நடத்திய வாழை, ஒடிடி தளத்தில் வெளியாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. படம் முழுவதும் வாழைக்காய் தூக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த காட்சிகள், முதலில் வரும்போது சுவாரஸ்யமாக இருந்தாலும் அடுத்தடுத்து வரும்போது சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், வரும் விபத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.
#வாழை படத்துலெ மாரி செல்வராஜ் காட்டுகிற காட்சி அமைப்புகளுக்கு இந்த பாட்டுதான் பொருத்தமாக உள்ளது.
— rajapaarvay (@kamalianism) October 20, 2024
ஒடுக்கப்படுபவர்கள் படம்னு சொல்லிட்டு மாணவர் ஆசிரியர் உறவை இவ்வளவு மோசமாகவா காட்டுவார்கள்
இதே காட்சிகள் Gender மட்டும் மாறி இருந்தால் எல்லோரும் போஸ்கோவுலெ கம்பி எண்ண வேண்டியிருக்கும் https://t.co/pS1rbsJo65 pic.twitter.com/4ypcfxn9gY
தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் சீனுக்கு சீன் அழ வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து பல காட்சிகளை இயக்குனர் வேண்டுமென்றே புகுத்தியுள்ளார். செயற்கையாக பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், டீச்சர் கேரக்டரில் நடிகை நிகிலா விமல் சிறப்பாக நடித்திருந்தாலும், அவரை மாணவர்கள் பார்க்கும் பார்வை கடுமையான உணர்வை ஏற்படுத்துகிறது. கர்ச்சிப்பை முகர்ந்து பார்க்கும் காட்சிகள் எல்லாம் எதற்காக? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக ஒடிடி தளத்தில் வெளியான வாழை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
~ சில படங்கள் ஆரவாரமே இல்லாம வெளி வந்து, ஆளமா நம்ம மனசுல இடம் புடிச்சிரும்.
— Dr. தண்டச் சோறு (@siya_twits) October 14, 2024
அப்படி ஒரு படம் தான்
கருணாஸ்ங்கிற மகா கலைஞன்
நடிச்ச#போகுமிடம்_வெகு_தூரமில்லை
❤ pic.twitter.com/sI5B2HTDA0
போகுமிடம் வெகுதூரமில்லை
அதேபோல் வாழை படம் வெளியான அதே நாளில் திரையரங்குகளில் வெளியான படம் தான் போகுமிடம் வெகுதூரமில்லை. விமல் கருணாஸ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் தியேட்டருக்கு வந்ததே பலருக்கும் தெரியாது. ஆனால், தற்போது இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா இயக்கியுள்ள இந்த படம், ஒரு அறிமுக இயக்குனரின் திரைப்படம என்பதை தாண்டி ஒரு நேர்த்தியான திரைக்கதை என்று பாராட்டுக்களை பெற்று வருகிறது.
வாழை என்ற திரைப்பட வெளிச்சத்தில் மறைந்து போன #போகுமிடம்_வெகுதூரமில்லை
— விக்னேஷ் KC. பஞ்சாபி (@KCPanchabi96) October 19, 2024
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இயக்குனர் @MichealKRaja அவர்களுக்கு வாழ்த்துக்கள். 👍#அன்பு_சூழ்உலகு pic.twitter.com/Umg3WGTto5
#போகுமிடம்_வெகுதூரமில்லை ஒரு நல்ல படத்தை எல்லாரும் சேர்ந்து சாகடிச்டானுங்க . @ @RedGiantMovies_ கண்ட படத்தையெல்லாம் பெருசா புரோமோட் பண்ணி இப்பிடி பண்ணிட்டானுங்க 😓😓 pic.twitter.com/2yD4X1ZhMJ
— Kamal Selva UAE🇦🇪 (@Selva07254642) October 18, 2024
அதேபோல் படத்தில் நடித்துள்ள கருணாஸ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளதாகவும், படத்தின் இறுதிக்காட்சியில் அனைத்து கிளைக்கதைகளையும் ஒன்றாக இணைத்த விதம் சிறப்பாக இருந்ததாகவும், கூறி வருகிறனர். உலக சினிமாக்கள் வசூலில் கோடிகளை குவிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. அந்த வரிசையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த போகுமிடம் வெகுதூரமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.