வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் வடிவேலு. காமெடி மட்டுமல்லாது முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியுள்ள வடிவேலு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நாயகனாக நடித்து வெளியான, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்த வடிவேலு இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாத்தில் நடித்தபோது தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வெறுபாடு காரணமாக தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு தடை விதித்தது அனைவரும் அறிந்த ஒன்று. அதன்பிறகு தடையில் இருந்து மீண்ட வடிவேறு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
சுராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷிவானி, ஆனந்தராஜ், ரெட்டின் கிங்ஸ்லெ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே நாய் சேகர் ரிட்டஸ் படத்தின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிளாக் காமெடி ஜானரில் தயாராகியுள்ளது டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. நாய் திருடும் நபராக வடிவலு நடித்துள்ளார் என்பது டிரெய்லரில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படம் டிசம்பர் 9-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil