தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நட்சத்திரமான வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் நாய் சேகர் படத்தின் 2-வது சிங்கிள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் வடிவேலு. காமெடி மட்டுமல்லாது முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியுள்ள வடிவேலு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நாயகனாக நடித்து வெளியான, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து இந்திரலோகத்தில் நா. அழகப்பன், எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடத்திருந்த வடிவேலு
இதன் காரணமாக ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து வடிவேலுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தடையில் இருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதல் படமாக லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நாயகனாக நடித்து வருகிறார்.
சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் வடிவேலுவுடன், குக் வித்கோமாளி பிரபலம் சிவாங்கி, ரெட்டின் கிங்ஸ்லே, ஷிவாணி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைாக நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாய் சேகர் படத்தின் முதல் பாடல் வெளியானது. எங்க அப்பத்தா ஷைடைப் என்று தொடங்கும் இந்த பாடலை வடிவேலுவே பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் 2-வது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஓ மை காட் நாம பணக்காரன் என்ற இந்த பாடலையும் நடிகர் வடிவேலுவே பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தலைவன் வேற லெவல் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil