தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வைரமுத்து, இளையராஜாவுடன் இணைந்து பல பாடல்களை கொடுத்திருந்தாலும், 40 ஆண்டுகளுக்கு மேலான தனது திரை வாழ்க்கையில் வைரமுத்து 6 ஆண்டுகள் மட்டுமே இளையராஜாவுடன் இணைந்து பயணித்துள்ளார். குறிப்பாக இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான கடைசி பாடல் இன்றும் ஒரு பெரிய ஹிட் பாடலாக உள்ளது. இந்த பாடல் இவர்கள் பிரிவுக்கும் ஒரு உதாரணமாக சொல்லப்படுகிறது.
Advertisment
1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் வைரமுத்து. இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார்.
அதே சமயம் இவர்கள் இருவரும் இணைந்த கடைசி படம் புன்னகை மன்னன் தான் என்றாலும், இவர்கள் கூட்டணியில் வெளியான கடைசி பாடல், சிறைப் பறவை படத்தில் இடம் பெற்றுள்ளது. மனோபாலா இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான படம் சிறைப்பறவை. விஜயகாந்த், ராதிகா, மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 4 பாடல்கள் இடம் பெற்ற இந்த படத்தில், மு.மேத்தா, வாலி, முத்துலிங்கம் ஆகியோருடன் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருந்தார்.
Advertisment
Advertisements
கெட்டது செய்யும் அரசியல்வாதி, ஹீரோயினை கடத்தி பலாத்காரம் செய்ய முயலும்போது, அவர் அரசியல்வாதியை கொலை செய்துவிட அந்த பழி, போலீஸ் அதிகாரியான ஹீரோ மீது விழுந்து அவர் சிறை சென்றுவிடுவார். ஒருநாள் பரோலில் வரும்போது தனது மகளிடம் நடந்ததை பாடலாக எடுத்து சொல்வார் ஹீரோ. அப்போது வரும் பாடல் தான் ‘’பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’’ என்ற பாடல். இநத படம் வெற்றி பெற்ற நிலையில், இந்த பாடல் இன்றுவரை பலராலும் ரசிக்கும் ஒரு பாடலாக இருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக நடித்த மலேசியா வாசுதேவன் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த பாடலுக்கு பின் இளையராஜா – வைரமுத்து கூட்டணி இதுவரை இணையாத நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையில் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்ற பாடலே பெரும் உதாரணமாக அமைந்துவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“