தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வைரமுத்து,இளையராஜாவை விட்டு பிரிந்த பின் அவசர அவசரமாக ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர், 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்த கடைசி படம் புன்னகை மன்னன் தான் என்றாலும், இவர்கள் கூட்டணியில் வெளியான கடைசி பாடல், சிறைப் பறவை படத்தில் இடம் பெற்றுள்ளது. அதேபோல் இவர்கள் பிரிந்தபின், இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.
தமிழில் புன்னகை மன்னன் வெளியான 1986ம் ஆண்டு தெலுங்கில் சுவாதி முத்தையா என்ற படம் வெளியானது. கே.விஸ்வநாத் இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், ராதிகா இணைந்து நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தெலுங்கில் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். இதற்காக பாடல்கள் எழுத கவிஞர் வைரமுத்துவிடம் கூறியுள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் இளையராஜா வைரமுத்து பிரிந்திருந்த காரணத்தினால், சுவாதி முத்தையா படத்தின் பாடல்காட்சிளை பார்த்து அவர்களின் உதடு அசைவை வைத்து வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் பதிப்பில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘’துள்ளி துள்ளி நீ பாடம்மா என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி இணைந்து பாடிய இந்த பாடல் தெலுங்கு பாடலை பார்த்து 10 நிமிடத்தில் தமிழுக்கு ஏற்றபடி வரிகளை அமைத்துள்ளார் வைரமுத்து. சிற்பிக்குள் முத்து என்ற பெயரில் தமிழில் வெளியான இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. ராமாயணத்தில் வரும் சம்பவங்களை வைத்து எழுதிய இந்த பாடலை மகிழ்ச்சியாக தொடங்கும், எஸ்.ஜானகி சோகமாக முடித்திருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“