Valimai Movie Telecast In Zee Tamil On May Day : நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார், இயக்குநர் எச் வினோத், மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்த படம் வலிமை. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 25-ந் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.
அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வலிமை திரைக்கடம் ஜீதமிழில் ஒளிபரப்பாக உள்ளது. அதிரடி ஆக்ஷன் குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
வலிமை என்றால் பலம், அது உழைக்கும் சமூகத்தின் அடையாளமாக உள்ள நிலையில், இந்த தொழிலாளர் தினத்திற்கு வலிமை திரைப்படத்தை திரையிட உள்ளது. அஜித் குமார், கார்த்திகேயா கும்மகொண்டா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை நாயகன் மடக்கி பிடிப்பதே இந்த படத்தின் முக்கிய கருவாகும்.

வலிமை திரைப்படம் வெளியான 2 மாதங்களில் சின்னத்தியில் வெளியாவது ரசிகர்கள மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இவ்வளவு விரைவாக அஜித் படம் சின்னத்திரையில் வெளியாவது அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இந்த படத்தின் மூலம் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க அஜித் ரசிகர்கள் முயற்சிப்பார்கள் என்று கூறலாம்.
அதேபோல் சூர்யா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு்ளள இந்த படம் கவலையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தீபாவளி தினத்தில் ரஜியினின் அண்ணாத்த படத்துடன் மோத இருந்த மாநாடு தவிர்க்க முடியாத சில காரங்களால் தள்ளப்போய் ஓரிரு வாரங்கள் கழித்து வெளியானது. ஆனாலும் இந்த படம் வசூலில் பெரிய சாதனை படைத்து. விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து மே தினத்தை முன்னிட்டு அஜித் நடிப்பில் தயாராகி வரும் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கமல் நடிப்பில் தயாராகியுள்ள விக்ரம் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் மே 1-ந தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதே போல் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தின் அறிவிப்பு தளபதி 66 மற்றும் சூர்யா 41 போன்ற படங்களிக் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“