scorecardresearch

வலிமை படத்தின் 2-வது பாடல்… வெளியான புதிய அப்டேட்… ரசிகர்கள் கொண்டாட்டம்…

Tamil Cinema Update : வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் எதிர்பார்ப்பை கூட்டுவதற்கு படக்குழு தற்போது மீண்டும் ஒரு ப்ரமோவை வெளியிட்டுள்ளது.

Valimai 2nd Single Promo Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது படம் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடுவது வழக்கம். மேலும் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை என்ற வெற்றிப்படத்தில் இணைந்த இயக்குநர் எச்.வினோத் நடிகர் அஜித் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 2-வது முறையாக இணைந்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிரக ஹீமா குரோஷி நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும்  யோகி பாபு, அச்சுயுத்குமார் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பெங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 13ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதன்பிறகு இந்த படம் குறித்து எவ்வித அப்டேட்டும் வெளியாக வில்லை.

இதனால் கவலையடைந்த அஜித் ரசிகர்கள், பொது இடம் கிரிக்கெட் ஸ்டேடியம், அரசியல்வாதிகள் மீட்டிங் என அனைத்து இடங்களிலும் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர். ஒருகட்டத்தில் எல்லை மீறிய ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் சமூக வலைதள பக்கங்களில் கேட்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை முன்னோட்டம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இந்த படத்தில் முதல் பாடல் வெளியிட்ப்பட்டது. விக்னேஷ் சிவன் எழுதிய நாங்க வேற மாறி என்ற அந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடத்தொடங்கினர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் எதிர்பார்ப்பை கூட்டுவதற்கு படக்குழு தற்போது மீண்டும் ஒரு ப்ரமோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்தில் 2வது பாடல் வரும் 5-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னெஷ் சிவன் எழுதியுள்ள நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ என்ற அந்த பாடல் குறித்த ப்ரமோ தற்போது வலைதளங்களில் வைலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் இந்த ப்ரமோவை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த ப்ராமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தளபதி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்தக்கள் என்று கூறியுள்ளார். அஜித் போன்றவர்களின் மூலம் வரும் இந்த பாடல் அனைத்து அம்மாகளின் சார்பாக போற்றுவோம் … தாயக அன்னையாக…. வேற லெவல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த பாடல் மற்றும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர்.

வியாபாரி & ராம் & பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களில் அம்மாவின் அருமையை உணர்த்தும் விதமாக வந்த பாடல்களின் வரிசையில் இந்த பாடலும் தனி இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள் என்று ஒருவரும், தல என்னும் பெயர் வேண்டாம் என்று சொன்னாலும், அதை தவிர்த்தாலும் தமிழ் நாட்டின் தல என்றென்றும் அஜித் குமார் மட்டும் தான் என்று மற்றொருவரும் கூறியுள்ளனர். மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema valimai second single update promo video in tamil