எஸ்.கே.வுக்கு எதிராக ஆடியோ ஆதாரம்; தப்பை மறைக்க பெரும் தொகை செலவு: பிரபல விமர்சகர் புகார்

சிவகார்த்திகேயன் - இமான் இருவரும் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இணைந்திருந்தனர்.

சிவகார்த்திகேயன் - இமான் இருவரும் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இணைந்திருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivakarthikeyan D Iman Clash

சிவகார்த்திகேயன் - இமான்

சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் இமான் சொன்ன குற்றச்சாட்டுகள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த சர்ச்சை குறித்து தன்னிடம் ஆதாரம் உ்ளளதாகவும் தேவைப்பட்டால் அதை வெளியிடுவேன் என்று சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

Advertisment

சிவகார்த்திகேயன் நாயகனாக வளர்ந்து வந்த சமயத்தில் அவரை தனது பாடல்கள் கிராமம் வரை கொண்டு சேர்த்தவர் இசையமைப்பாளர் டி.இமான். மனம்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் தனது இசையில் சிவகார்த்திகேயனை பாடகராக அறிமுகப்படுத்தியதும் இமான் தான்.

கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இருவரும் இணைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்த இமான் அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்னை 2-வது திருமணம் செய்துகொண்டார். இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அடுத்த ஜென்மத்திலும் அவருடன் இணையமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இமானின் இந்த பேட்டி சமூகவலைதளங்களில் பெரும் வைரலாக பரவியதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பதில் அளித்த மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன், பிறர் மனை நோக்காமை என்று வள்ளுவர் சொன்னதை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மதிக்காதது தான் காரணம். ஒருவரை நம்பி வீட்டிற்கு அழைக்கும்போது அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

அதேபோல் இந்த விவகாரத்தை மறுத்து இமானின் முன்னாள் மனைவி சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்று சொல்லும்போதே உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு என்று வெட்ட வெளிச்சமாகிடுச்சி. இந்த விவகாரத்தில் மோனிகா அமைதியாக இருந்திருக்கலாம். அதேபோல் இந்த வீடியோ வைரலாகாமல் இருப்பதற்கும், மீம்ஸ்கள் வெளியிடவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் தொகை கைமாறியுள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக யூடியூப்பில் பேசுபவர்களுக்கு பெரும் தொகையும், அவருக்கு எதிராக பேசுபவர்களுக்கு யூடியூப் சேனலுக்கும் ஸ்டைக் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் அந்தணன். இந்த வீடியோ பதிவு மெட்ரோ மெயில் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan D Imman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: