சுருட்டை முடி... எதார்த்த அழகு : வணங்கான் பட நடிகை வைரல் க்ளிக்ஸ்
பாலா இயக்கத்தில் தயாராகி வரும் வணங்கான் படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரோஷ்னி பிரகாஷ் 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சப்தகிரி எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
2/7
அஜராமாரா, டைகர் கில்லி என கன்னட படங்களில் நடித்துள்ள ரோஷ்னி பிரகாஷ், வி.இசட் துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த ஏமாளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/7
ஏமாளி படம் ரோஷ்னிக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், கன்னடத்தில் கவலுதாரி என்ற வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கபடதாரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது.
4/7
கதிர் நடிப்பில் வெளியான ஜடா என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்த ரோஷ்னி, அடுத்த 47 டேஸ், 11 ஹவர்ஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார்.
5/7
பை ஒன் கெட் ஒன் லக்கி மேன் உள்ளிட்ட கன்னட படங்களில் நடித்த ரோஷ்னி வருண் தேஜ்ஜூடன் இணைந்து நடித்த காண்டீவாரதினா அர்ஜூனா என்ற படம் வெளியானது.
6/7
தற்போது தமிழில் 3-வது படமாக பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். முதலில் சூர்யா கிர்த்தி ஷெட்டி நடிப்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் இருவரும் விலகியதை தொடர்ந்து அருண் விஜய் ரோஷ்னி நடித்து வருகின்றனர்.
7/7
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி பிரகாஷ் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.