Advertisment

வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் மரணம் : திரை பிரபலங்கள் இரங்கல்

கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பரை வனிதா 3-வது முறையாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஓரிரு நாட்களில் அவரை பிரிந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar

வனிதா விஜயகுமார்

நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மரணமடைந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளாக இவர், தொடர்ந்து மாணிக்கம் என்ற படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்த வனிதா, ஹிட்லர் பிரதர்ஸ் என்ற மலையாள படத்திலும், தேவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா சினிமாவில் இருந்து விலகினார். இதனிடையே 2007-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த வனிதா, அதே ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் எனபரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்த வனிதா அதன்பிறகு தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பரை வனிதா 3-வது முறையாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஓரிரு நாட்களில் தன்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்துகொண்டார் என்று பீட்டர் பாலின் முதல் மனைவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவரின் பேட்டியும் இணைத்தில் வைரலாக பரவிய நிலையில், திருமணமான ஓரிரு நாட்களில் இருவரும் பரிந்தனர்.

இந்த பிரிவுக்கு காரணம் பீட்டர் பாலின் அதிகப்படியான குடிப்பழக்கம் தான் என்று வனிதா கூறியிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பீட்டர் பால் இன்று மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment