வனிதா மாஜி கணவர் பீட்டர் பால் மரணத்திற்கு இதுதான் காரணமா? லேட்டஸ்ட் தகவல்கள்

விஷூவல் எபெஃப்ட்இஞ்சினியரான பீட்டர்பால் வனிதாவின் யூடியூப் சேனல் வீடியோவுக்கு உதவி செய்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விஷூவல் எபெஃப்ட்இஞ்சினியரான பீட்டர்பால் வனிதாவின் யூடியூப் சேனல் வீடியோவுக்கு உதவி செய்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vantiha

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால்

நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மரணமடைந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisment

கடந்த 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளாக இவர், தொடர்ந்து மாணிக்கம் என்ற படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்த வனிதா, ஹிட்லர் பிரதர்ஸ் என்ற மலையாள படத்திலும், தேவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா சினிமாவில் இருந்து விலகினார். இதனிடையே 2007-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த வனிதா, அதே ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்பரை திருமணம் செய்துகொண்ட நிலையில், 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்த வனிதா அதன்பிறகு தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பரை வனிதா 3-வது முறையாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஓரிரு நாட்களில் பீட்டர் பாலையும் பிரிந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பீட்டர் பால் இன்று மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

விஷூவல் எபெஃப்ட்இஞ்சினியரான பீட்டர்பால் வனிதாவின் யூடியூப் சேனல் வீடியோவுக்கு உதவி செய்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் பீட்டர் பால் முன்னாள் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்துகொண்டதாக புகார் அளித்திருந்தார்.

இதனால் கருத்து வேறு காரணமாக பீட்டர் பாலை பிரிந்த வனிதா தனியாக வசித்து வந்த நிலையில், பீட்டர் பாலுக்கு குடிபழக்கம் மற்றும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். மேலும் இது குறித்து வனிதாவிடம் எடுத்து கூறிய பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் வனிதாவின் யூடியூப் சேனல் மூலம் பரஸ்பர விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே இன்று பீட்டர் பால் திடீரென மரணமடைந்தார். அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனிடையே பீட்டர் பால் இன்று மரணமடைந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: