scorecardresearch

கூப்டு வச்சி அசிங்கப்படுத்துறியா… நான் கிளம்புறேன் : வனிதாவிடம் கோபமான ராபர்ட்

சாப்பிடலாமா என்று வனிதா கேட்க இல்லை நீயோ சாப்பிடு கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துறியா நான் கிளம்புறேன் என்று ராபர்ட் கிளம்புகிறார்.

Robart
ராபர்ட் – வனிதா விஜயகுமார்

நடிகை வனிதாவுடன் நேர்காணலில் பங்கேற்ற நடிகரும் நடன இயக்குனருமான ராபர்ட் இந்நிகழ்ச்சியில் வனிதா தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியான நடிகையாக வலம் வரும் வனிதா விஜயகுமார் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் வெளியிடும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல் தற்போது புதிதாக கேம்பிங் வித் வனிதா என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல் எபிசோட்டில் தனது முன்னாள் பாட்னராக ராபர்ட்டை நேர்காணல் செய்திருந்தார். இருவரும் கேஷ்யூவலாக மீன் சமைத்துக்கொண்டே பேசிக்கொண்டிப்பது போன்று வெளியாகியுள்ள இந்த வித்தியாசமாக வீடியோக்வுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் பிரேக்அப் ஆன முன்னாள் பாட்னருடன் வனிதா நேர்காணல் செய்வது வித்தியாசமாக இருக்கிறது என்று பலரும் கூறியிருந்தனர். இதனிடையே இந்த நேர்காணலில் ராபர்ட்டின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசப்பட்ட நிலையில், ஒவ்வொரு கலருக்கும் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் வனிதா.

முதலில் பிளாக் என்று சொல்ல அதற்கு ராபர்ட் என்றும், கோல்ட் என்ற கலர் தனது அப்பாவையும், வொயிட் தனது அம்மாவையும் ஞாபகப்படுத்தும் என்று கூறியுள்ள ராபர்ட் ரெட் என்றதும் உன்னைத்தான் ஞாபகப்படுத்தும் என்றும் வனிதாவை குறிப்பிட்டு சொல்கிறார். அதன்பிறகு சாப்பிடலாமா என்று வனிதா கேட்க இல்லை நீயோ சாப்பிடு கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துரியா நான் கிளம்புறேன் என்று ராபர்ட் கிளம்புகிறார்.

அப்போது வனிதா என்னாச்சு என்று கேட்க எல்லாரிடமும் கேட்டு என்ட அந்த கேள்வியை கேட்கவே இல்லையே என்று கேட்கிறார். அதை புரியாத வசிதா என்ன கேள்வி என்று கேட்க அரசியல் என்று பதில் சொல்கிறார். அரசியல் உனக்கு விருப்பம் இருக்கா என்று வனிதா கேட்க கொஞ்சம் என்று பதில் அளிக்கிறார். தொடர்ந்து நான் சிங்கிள் என்று ராபர்ட் சொல்ல இதை சொல்லியே இன்னும் எத்தனை பேரை ஏமாற்றுவே என்று வனிதா கேட்கிறார். நான் லைஃபில் சொல்லல அரசியலில் சொல்கிறேன். அரசியலில் நான் தனியாகத்தான் வருவேன் என்று கூறியுள்ளார் ராபர்ட்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema vanitha vijayakumar interview dance master robert viral video

Best of Express