'சிவராத்திரி தூக்கம் ஏது'... நெருங்கும் ரிலீஸ் தேதி: வனிதா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிப்பு

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் 'சிவராத்திரி தூக்கம் ஏது' ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் 'சிவராத்திரி தூக்கம் ஏது' ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
vanitha Vijayakumar Pregnancy

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி தயாரித்து நாயகியாக நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் முதல் சிங்கிள் நாளை (ஜூன் 23) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளாக இவர், அடுத்து மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவர், டிவி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், பிரஷாந்தின் அந்தகன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தர்.

தற்போது பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதனிடையே, இவர் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ரீமன் ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை, வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அறிமுக டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து, படத்தின் டிரெய்லர் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

Advertisment
Advertisements

மேலும், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், வனிதா விஜயகுமார் அவரது மகள் ஜோவிகா மற்றும் படக்குழு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். இதனிடையே மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வரும் ஜூலை 4 ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் 'சிவராத்திரி' பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: