நான் பண்ண தப்ப நீங்க பண்ணிடாதீங்க; குடும்பம் நாசமா போய்டும்: வனிதா விஜயகுமார் ஆவேசம்!

தில்லு இருந்தா போராடு, ஹரா, அந்தகன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வனிதா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

தில்லு இருந்தா போராடு, ஹரா, அந்தகன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வனிதா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Vanitha VIjay

சமீபத்தில் வெளியான மிஸஸ் அண் மிஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், நான் செய்த தவறை நீங்கள் யாரும் செய்துவிட வேண்டாம் என்று நடிகை வனிதா விஜயகுமார், படத்தின் ரிலீஸ்க்கு முன்பாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார் அதன்பிறகு, சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 1999-ம் ஆண்டு தெலுங்கில் தேவி என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு, கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகிய வனிதா, 2007-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா, 2012-ம் ஆண்டு அவரை பிரிந்த நிலையில், 2013-ம் ஆண்டு வெளியான நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன்பிறகு, 2015-ம் ஆண்டு வனிதாவின் முன்னாள் காதலரும் நடன இயக்குனருமான ராபர்ட் நடிப்பில் வெளியான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தில், தயாரிப்பாளராகவும் ரைட்டராகவும் பணியாற்றி இருந்தார்,

அதன்பிறகு சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் என ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த வனிதா, 2023-ம் ஆண்டு வெளியான அநீதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தில்லு இருந்தா போராடு, ஹரா, அந்தகன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வனிதா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்திருந்தார். படம் குறித்து நெகடீவ் விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ஒடிடி தளத்தில் வெளியிடாமல், வனிதா தனது யூடியூப் சேனலில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் இந்த படத்தை வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக பல யூடியூப் சேனல்களில் படத்தின் ப்ரமோஷனுக்காக பேசிய வனிதா பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அந்த வகையில், ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசிய வனிதா விஜயகுமார், தயவு செய்து நான் செய்த தவறை நீங்கள் யாரும் செய்துவிட வேண்டாம். உங்கள் எக்ஸ் பாய்ப்ரண்டுடன் மீண்டும் வேலை செய்யும் நிலை வந்தால் செய்யாதீர்கள். சீரியஸாக சொல்கிறேன். அப்படி ஒரு முடிவை எடுத்துவிட வேண்டாம். அது நல்ல யோசனையாக இருக்காது. எனக்கு படம் நன்றாக வர வேண்டும் என்ற சுயநலம். அவரிடம் உதவி கேட்டேன். ஒரு நடிகரா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அதே சமயம் அவருக்கும் சுயநலம் இருக்கு. படம் வெற்றி பெறும், படத்தை நான் ரிலீஸ செய்துவிடுவேன். இந்த படத்தின் மூலம் பெரிய பிரேக் கிடைக்கும் என்று நினைத்தான் என்னுடன் இணைந்தார். ஜோவிகாவை சிறுவயதில் இருந்து அவருக்கு தெரியும் என்ற காரணமும் இருக்கிறது. ஒரு நல்ல எண்ணத்தில் தொடங்கினோம். எந்த உறவுகளாக இருந்தாலும் 3-வது மனிதன் அதில் இடையில் வர கூடாது. இதை எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பரிந்துரைக்கோ அல்லது யோசனைக்கோ 3-வது மனிதனை இடையில் விட்டால், அந்த குடும்பம் நாசமாக போய்விடும். இந்த மாதிரியான காரணங்களால் பல உறவுகள் அழிந்திருக்கிறது. பல குடும்பங்கள் பிரிந்திருக்கிறது என்று வனிதா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: