விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் 2-வது பாடலுக்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த போஸ்டர் குறித்து பாஜகவை சேர்ந்த ஜே.எஸ்.கே கோபி வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவரான விஜய், பீஸ்ட் படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் வாரிசு படம் குறித்து அவ்வப்போது வெளியாகி வரும் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே வாரிசு படத்தின் 2-வது பாடல் வெளியாகும் அறிவிப்பு தொடர்பான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 30 வருடங்களை கடந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையில், வாரிசு படத்தை தயாரித்து ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் டிசம்பர் 4-ந் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் 2-வது சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சதுரங்கத்தில் தீப்பற்றி எரிவது போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரின் மேல் சிலுவை போன்ற வடிவம் உள்ளது.
நியாயமா பாத்தா அண்ணா Fans எனக்கு நன்றி சொல்லனும்….
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) December 2, 2022
ஆனா திட்றானுவ….
ஐடியா இல்லாத பசங்க.. pic.twitter.com/lRxhkdaJ83
இந்த போஸ்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவை சேர்ந்த ஜே.எஸ்.கே.கோபி, எல்லா படத்துலயும் சிலுவைய எப்படியாவது கொண்டு வர்றதுதான் விஜய்ணாவோட ஸ்பெஷல்….. கடைசில வம்சி மாம்ஸ்ம் அண்ணாகிட்ட சரண்டர் ஆய்ட்டாப்ல…… நியாயமா பாத்தா அண்ணா Fans எனக்கு நன்றி சொல்லனும்…. ஆனா திட்றானுவ…. ஐடியா இல்லாத பசங்க.. என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்தபதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil