scorecardresearch

இந்த ஆண்டில் முதல் ரூ150 கோடி வசூல்: வாரிசு கலெக்ஷன் அதிகாரபூர்வ அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான வாரிசு திரைப்படம்,உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது

Varisu
Varisu review live

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் தற்போதுவரை 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூாவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதல் முதலாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, கணேஷ் வெங்கட் ராம், குஷ்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான வாரிசு திரைப்படம்,உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களில் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் விடுமுறை என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

இதனிடையே வாரிசு படத்துடன் வெளியான துணிவு திரையரங்குகளில் கடும் போட்டியை எதிர்கொண்ட போதிலும், வாரிசு படத்திற்கு இணையாக துணிவும் பெரிய வசூலி சாதனை நிகழ்த்தி வருகிறது. ஆனாலும் வாரிசு உலகளவில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள நிலையில், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி (நேற்று), ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இப்படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ 150 கோடியைத் தாண்டியது. போஸ்டரைப் பகிர்ந்துகொண்டு, “#MegaBlockbusterVarisu உலகளவில் 150Cr+ வசூலைக் கடந்த 5 நாட்களில் நண்பா! ஆட்டநாயகன் (sic)” என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும் வாரிசு இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த வணிகத்தையும் செய்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema varisu collect 150 crore on world wide box office