தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் ஆன்லைனில் கசிந்துள்ளது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம் யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்
சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பெரும்பகுதி படமாக்கப்பட்ட வாரிசு திரைரப்படம் விசாகப்பட்டினம், பெல்லாரி மற்றும் லடாக் ஆகிய இடங்களில் அவ்வப்போது படமாக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் ஜனவரி 11 (நேற்று) வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெபற்பை பெற்று வரும்வாரிசு திரைப்படம் தற்போது ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. ஃபிலிமிசில்லா (Filmyzilla), மூவிரூல்ஸ் (Movierulez), டெலிகிராம் (Telegram), தமிழ் ராக்கர்ஸ் (Tamilrockers) உள்ளிட்ட பல்வேறு டொரண்ட் தளங்களில் வாரிசு படம் முழு எச்டி பதிப்புகளில் கசிந்துள்ளது.
தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படம், டோரண்ட் தளத்தில் கசிந்துள்ளது. மக்கள் வாரிசு படத்தை இலவசமாக பதிவிறக்கம், செய்யும் வகையில், 1080p, 720p, 480p, 360p, 240p, HD இல் உள்ளிட்ட தரங்களில் படம் கிடைக்கிறது. இந்த தகவல் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் நாளை (ஜனவரி 13) இந்தியில் வெளியாக உள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் அஜித்குமாரின் துணிவு படத்துடன் வெளியான வாரிசு இந்தியா முழுவதும் முதல் நாள் முன்பதிவில் ரூ.9.6 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்து. ஆனால் விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் படத்தின் முன்பதிவு ரூ.26 கோடியைத் தொட வாரிசு தவறிவிட்டது.இதனிடையே ஆன்லைனில் வெளியாகி இருந்தாலும் மக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும் என்று படக்குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆன்லைன் தளங்களில் படத்தைப் பார்க்காமல், டிக்கெட்டுகளை வாங்கி, தியேட்டர்களில் அல்லது டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும்போது அங்கீகரிக்கப்பட்ட ஒடிடி (OTT) தளங்களில் மட்டுமே படத்தைப் பார்க்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொள்கிறோம். 1957 இன் காப்புரிமைச் சட்டத்தின்படி, திருட்டு என்பது கிரிமினல் குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil