இளம் நடிகர் தற்கொலை... தோல்வியை நோக்கி வாரிசு? டாப் 5 சினிமா

பல படங்களில் துணை நடிகராக நடித்தள்ள ராமதாஸ் காக்கிச்சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார்.

பல படங்களில் துணை நடிகராக நடித்தள்ள ராமதாஸ் காக்கிச்சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
இளம் நடிகர் தற்கொலை... தோல்வியை நோக்கி வாரிசு? டாப் 5 சினிமா

பிரபல இயக்குனர் ராமதாஸ் மரணம்

Advertisment

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராமதாஸ். தொடர்ந்து ராஜா ராஜாதான் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், சில படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். பல படங்களில் துணை நடிகராக நடித்தள்ள ராமதாஸ் காக்கிச்சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறனின் விசாரணை, விக்ரம் வேதா, தர்மதுரை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

தோல்வியை நோக்கி செல்கிறதா வாரிசு?

விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் வாரிசு, கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வாரிசு படம் உலகளவில் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், கல்ஃப் நாடுகளில் வாரிசு படம் இதுவரை 12.5 கோடிதான் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை லாபத்தை எட்டவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்ஃப் நாடுகளில் வாரிகு கண்டிப்பாக தோல்வியை தழுவும் என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

ரஜினிகாந்த் – சிபி சக்ரவர்த்தி படம் கைவிட காரணம் இதுதானா?

டான் படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக அறிமுகமான சிபி சக்ரவர்த்தி அந்த படத்தின் வெற்றி மூலமாக ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிபி சொன்ன ஒன்லைன் பிடித்து போன ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒப்புகொண்ட நிலையில், முழுகதையும் வந்த பிறகு அவருக்கு திருப்தி இல்லாததால், பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திரபிரசாத்திடம் திரைக்கதையில் மாற்றம் செய்ய அழைத்துள்ளனர். ஆனால் அவர் செய்த மாற்றங்கள் சிபி சக்ரவர்த்தி ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவரை படத்தில் இருந்து ரஜினிகாந்த் வெளியேற்றிவிட்டதாக கூறப்படுகிறது.  

தெலுங்கு நடிகர் தற்கொலை

தெலுங்கில் குண்டனபு பொம்மா, செகண்ட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சுதீர் வர்மா, விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த சுதீர் வர்மா, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சந்தானம் நடிக்கும் புதிய படம்

காமெடியை விட்டு தற்போது முழு நேர ஹீரோவாக மாறிவிட்ட சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு குளுகுளு, ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் வெளியானது. விரைவில் அவர் நடித்த கிக் படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான டிக்கிலோனா படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிக்க உள்ள புதிய படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: