வாரிசு படத்தின அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து இசையமைப்பாளர் தமன் வெளியிட்டள்ள டவிட்டர் பதிவு விஜய்ரசிகர்க்ள மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளர்.
தமன் இசையமைத்துள்ள வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே ரஞ்சிதமே, தீ தளபதி என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். வாரிசு படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் அளிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் ஆட்டம் போட வைக்கும் வகையில் இருந்த நிலையில், 3வது சிங்கிள் அம்மா செண்டிமண்ட் பாடலா இருக்கும் என்றும் இந்த பாடலுக்கு ‘சோல் ஆஃப் வாரிசு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தமன் கூறியுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக “இது உனக்காக அம்மா, உங்கள் காதுகளை இனிமையாக்க வருகிறோம், அனைவரும் தங்கள் தாயை நேசிக்கிறோம், இந்த பாடலை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம், லவ் யூ அம்மா” என்று அவர் தமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இ்த பாடல் செவ்வாய்கிழமை (இன்று) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
#SoulofVarisu 💞
— thaman S (@MusicThaman) December 19, 2022
@actorvijay Vijay Anna’s Fav 🎵
It’s For U Amma ❤️
Coming to Hug 🤗 Ur Ears For Years 🎧
We all Love Our Mother Right ❤️🩹
Dedicating this Track to them
Love U Amma 🎧#VarisuThirdSingle 🤍#VarisuMusic#Varisu pic.twitter.com/uzyheWyV4w
தமிழில் துணிவு படத்துடன் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந்தேதி வெளியாகும் வாரிசு திரைப்படம், தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களுக்கு போட்டியாக வெளியாகிறது.
தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு படத்தின் 3-வது சிங்கிள் வெளியாகியுள்ளது. ஆஃப் வாரிசு என்று டைட்டிலுடன் வெளியாகியுள்ள ஆராரிராரோ கேட்குதம்மா என்று தொடங்கும் இந்த பாடலை பாடலாசியரியர் விவேக் எழுதியுள்ள நிலையில், பாடகி சித்ரா இந்த பாடலை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சித்ராவே பாடியுள்ள இந்த பாடல் விஜயின் சிவகாசி படத்திற்கு பின் அவரது படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“