scorecardresearch

வாரிசு படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்… பாலிவுட்டில் ஜோதிகா ரீ-என்டரி… டாப் 5 சினிமா செய்திகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகா சினிமாவில் ரீ-என்டரி கொடுத்தார்.

வாரிசு படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்… பாலிவுட்டில் ஜோதிகா ரீ-என்டரி… டாப் 5 சினிமா செய்திகள்

21 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் பிரபல நடிகை

வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகா சினிமாவில் ரீ-என்டரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக தற்போது காதல் என்ற படத்தில் நடித்து வரும் ஜோதிகா 21 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீ-என்டரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையை தழுவி இந்தியில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாகவும், இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஸ்ரீகாந்த் பொல்லாவாக ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜோதிகா ஏற்கனவே டோலி சஜா கே ரக்கீனா, லிட்டில் ஜான் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமத்திற்கு கோவில் கட்டி கொடுத்த தளபதி விஜய்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை பனையூர் அலுவலகத்தின் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பிற்கு பின் பேசிய ரசிகர் ஒருவர், விஜய் தனது ஊருக்கு கோவில் கட்டி கொடுத்துள்ளதாகவும், பஸ் வசதி கூட இல்லாத எங்களது கிராமத்திற்கு விஜய் வந்து சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் ஊருக்கு அன்னதானம் எல்லாம் செய்துள்ளார். இன்னமும் எங்களது ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் படத்தின் பெயர்களைதான் வைக்கிறோம் என்று கூறியுள்ளார். விஜய்க்கு முதன் முதலில் கல்வெட்டு, சிலை வைத்தது எங்கள் கிராமம் தான் என்றும் கூறியுள்ளார்.

டிஜிட்டலில் மீண்டும் வெளியாகும் ரஜினியின் பாபா

ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்திருந்தார் ரஜினிகாந்த். பாபாஜி கடவுளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து விரைவில் தமிழகம் முழுவதும் பாபா படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

வாரிசு படத்தை கைப்பற்றிய விக்ரம் பட தயாரிப்பு நிறுவனம்

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் விஜய் தற்போது தீவிரமாக நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்க்பபட்டுள்ளது. அதே சமயம் ஆந்திராவில் நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆந்திரா தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளதால் ஆந்திராவில் வாரிசு படம் வெளியாகவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழகத்தில் வாரிசு படத்தில் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இதனிடையே வாரிசு படத்தின் புதிய அப்டே்ட் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விக்ரமின் கோப்ரா படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.எல்.விஜயின் அடுத்த படம்

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.எல்.விஜய் தொடர்ந்து மதராசப்பட்டினம், தாண்டவம், சைவம், தெய்வ திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண்விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வருவதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema varisu movie release rights sevan screes studios jothika re entry