வாரிசு டிரெய்லர் அப்டேட், பெரிய விலைபோன ஏகே62 ஓடிடி உரிமம்? டாப் 5 சினிமா

துணிவு படத்தை முடித்துள்ள அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

துணிவு படத்தை முடித்துள்ள அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
வாரிசு டிரெய்லர் அப்டேட், பெரிய விலைபோன ஏகே62 ஓடிடி உரிமம்? டாப் 5 சினிமா

வாரிசு படத்தின் டிரெய்லர் அப்டேட்

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை தில்ராஜூ தயாரித்து வரும் நிலையில், வம்சி இயக்கி வருகிறார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள வாரிசு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 1-ந் தேதி வாரிசு படத்தில் டிரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நடிகையாக உயர்ந்த பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் சுருதி பெரியசாமி. தொடர்ந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர் தற்போது தற்போது நாயகியாக மாறியுள்ளார். சசிகுமார் நடித்து வரும் நந்தன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

ஓடிடி தளத்தில் பெரிய விலை போன ஏகே 62?

துணிவு படத்தை முடித்துள்ள அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஒடிடி உரிமத்தை வாங்குவதற்காக பெரிய நிறுவனங்களுக்கு இடையே போட்டி நடந்து வருவதாகவும், இந்த போட்டியில் ஒரு பெரிய நிறுவனம பெரிய தொகைக்கு படத்தை முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏ.எல். விஜய் இயக்கும் ஆக்ஷன் படத்தில் அருண்விஜய்

இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது அருண்விஜய் நடிப்பில் அசசம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். முழுக்க முழு ஆக்ஷன் செண்டிமெண்டை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்காக ஆக்ஷன் எமோஷன் இரண்டையும் சரியாக விகிதத்தில் வெளிப்படுத்தும் நடிகரை தேடியபோது அருண்விஜய் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றிதால் இயககுனர் ஏ.எல். விஜய் கூறியுள்ளார்.

தயாரிப்பாளராக நடிகர் கருணாஸ்

நடிகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் கருணாஸ் தற்போது சல்லியர்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மேதகு படத்தை இயக்கிய கிட்டு இயக்கியுள்ள இந்த படம் இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: