இந்தியாவில் தற்போது அதிகம் தேடப்படும் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நேஷ்னர் க்ரஷ் என்று பலரும் கூறி வந்தாலும் சிலர் தனது நடவடிக்கைகள் குறித்து ட்ரோல் செய்வது வேதனையாக உள்ளது என்று ராஷ்மிகா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
கன்னடத்தில் வெளியாக க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா தொடர்ந்து, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் ராஷ்மிகாவுக்கு நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு ஸ்கோப் இல்லை என்றாலும், விஜய் தனக்கு பிடித்த நடிகர் என்பதால் இந்த படத்தில் நடித்ததாக சமீபத்தில் கூறியிருந்தார். கன்னடம் தமிழ் தெலுங்கு மொழிகளை தொடர்ந்து, இந்தியிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஷன் மஜ்கு படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே சமீபத்தில் தெலுங்கு மீடியா ஒன்றுக்கு பேட் அளித்த ராஷ்மிகா, தன்னைப்பற்றி வரும் ட்ரோல்கள் மற்றும் கமெண்ட்கள் காரணமாக சினிமாவை விட்டு விலகிவிடாமா என்று கூட யோசித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக திரைப்பட பத்திரிகையாளர் பிரேமாவுக்கு அளித்த பேட்டியில் ராஷ்மிகா கூறுகையில், மக்கள் என் உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறார்கள் . நான் அதிகமாக வேலை செய்தால், ஆண் மாதிரி இருப்பதாகவும், நான் அதிகமாக வேலை செய்யவில்லை என்றால்,குண்டாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். நான் அதிகமாக பேசினால், அவள் மிகவும் பயப்படுகிறாள். நான் பேசவே இல்லை என்றால், ஓ, அது அணுகுமுறை. எனக்கு மூச்சு விடுவதும் பிரச்சினை, மூச்சு விடாமல் இருப்பதும் பிரச்சினையாக உள்ளது.
அதனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் எனது வேலையில் இருந்து வெளியேற வேண்டுமா? நான் தங்க வேண்டுமா? என் முதுகுக்குப் பின்னால் உள்ள இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். தொடர்ச்சியாக இப்படி ட்ரோல்கள் வருவது எனது ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் "நீங்கள் தெளிவுபடுத்தவில்லை என்றால், அதே நேரத்தில் இதையெல்லாம் கூறினால், நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு தெளிவு தாருங்கள். உங்களுக்கு என்னுடன் பிரச்சனை என்றால் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். உங்களுக்கு ஏன் இந்த பிரச்சனை? இப்படி முறைகேடாக நடந்துகொள்ளாதீர்கள் என்று கூறியுள்ள அவர், நெட்டிசன்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகளால் மனரீதியாக பாதிக்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, முதன்முறையாக ராஷ்மிகா ஒரு அறிக்கையில், “ஹாய் ஸோ.. கடந்த சில நாட்களாக அல்லது வாரங்களாக அல்லது மாதங்களாக அல்லது சில வருடங்களாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்து வருகின்றன, நான் அதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன் - பல ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்திருக்க வேண்டிய ஒன்று, ”என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் மீதான ட்ரோல்கள் குறித்து ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே தற்போது ராஷ்மிகா தன் மீதான ட்ரோல்கள் குறித்து மனவேதனையுடன் பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/