scorecardresearch

பிக்பாஸ்க்கு குட் பை சொல்லும் கமல்ஹாசன்? வசூலில் மாஸ் காட்டும் அவதார்… டாப் 5 சினிமா

விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந்தேதி வெளியாக உள்ளது.

பிக்பாஸ்க்கு குட் பை சொல்லும் கமல்ஹாசன்? வசூலில் மாஸ் காட்டும் அவதார்… டாப் 5 சினிமா

லத்தி முதல்நாளில் குறைந்த வசூல்

விஷால் நடிப்பில் நேற்று (டிசம்பர் 22) வெளியான படம் லத்தி. நந்தா மற்றும் ரமணா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நயன்தாராவின் கனெக்ட் படத்துடன் வெளியான லத்தி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் முதல்நாளில் படம் 2 கோடிதான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு – வாரிசு வெளிநாடு முன்பதிவில் முந்தியது யார்?

விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந்தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதனிடையே யூகே முன்பதிவில் வாரிசு இதுவரை 3760 டிக்கெட்டுகளும், துணிவு 925 டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூலில் மாஸ் காட்டும் அவதார்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ்’ கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 13 வருட இடைவெளிக்கு பிறகு அப்படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான அவதார் 2 படம் முதல் பாகத்தை போலவே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படம் தற்போதுவரை உலகம் முழுவதும் 600 மில்லியன் டாலர் வசூவலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கனகா வீட்டில் தீவிபத்து

ராமராஜனுடன் கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த கனகா, தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ள நிலையில் சென்னையில் வசித்து வருகிறார். இதனிடையே கனகா வீட்டில் பூஜை அறையில், விளக்கு கீழே விழுந்து தீப்பற்றியுள்ளது. இதனால் கனகா அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்த நிலையில், தீயணைப்பு துறைக்குபு தகவல் கொடுத்து அவர்கள் வந்து தீணை அனைத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பை சொல்லும் கமல்ஹாசன்?

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதுவரை 5 சீசன்கள் முடிந்து தற்போது 6-வது சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதில் போட்டியாளர்கள் செய்யும் தவறுக்கு கமல்ஹாசன் கொடுக்கும் பதில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை கமல்ஹாசன் இந்த சீசனுடன் முடித்தக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema varisu thunivu and biggboss kamalhaasan leaving update