விஜய் நடிப்பில் வாரிசு படம் இன்று வெளியானதை தொடர்ந்து, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் விதை பந்துகளை பரிசாக கொடுத்தனர்.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள படம் வாரிசு. சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு விஜய் குடும்ப அம்சங்கள் நிறைந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோசிபாபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையில் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தை கொண்டாடி வருகின்றனர். தியேட்டருக்கு வெளியே ஆராவாரத்துடன் ரசிகர்கள் தங்களது நடிகரின் படத்தை உற்சாகமாக வரவேற்ற நிலையில், டிக்கெட் வாங்கி கொண்டு முண்டியடுத்துக்கொண்டு திரைப்படத்தை பார்க்க சென்றனர். இதனால் கோவை உள்ளிட்ட பல மாவட்டங்கள் திருவிழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது.
.இதனிடையே கோவையில், வாரிசு படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் படம் முடிந்து வெளியே வரும்போது விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக அனைவருக்கும் விதை விதைப்பந்து பரிசாக வழங்ககப்பட்டது.
பி.ரஹ்மான் கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“