சமந்தாவுக்கு அம்மாவான வாரிசு நடிகை
சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்துள்ளார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சமந்தாவுக்கு நான் அம்மா மாதிரி என்று கூறியுள்ளார். அழகான இதயம் கொண்ட சமந்தாவை நான் பாதுகாக்க விரும்புகிறேன். அவருக்கு நாள் ஒரு அம்மா மாதிரி. அவருக்கு தோல்நோய் இருப்பது தெரியும். ஒருவரை நமக்கு பிடித்துவிட்டால் அவர் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்போம் அதுபோலத்தான் சமந்தா விஷயத்தில் நானும் என்று கூறியுள்ளார்.
வாரிசு படத்தை பார்த்த பிரபல தெலுங்கு நடிகர்
விஜய் நடிப்பில் தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகியுள்ள படம் வாரிசு. பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களது பக்கத்தில் இருந்து ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அலுவலகத்திற்கு வந்த பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரன் வாரிசு படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு சிறப்பாக வந்துள்ளது என்று படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்சாரில் கட் வாங்கிய துணிவு
அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள படம் துணிவு. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எழுந்துள்ள நிலையில், படம் சென்சார் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 145 நிமிடங்கள் கொண்ட துணிவு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் இருந்து பல கெட்டவார்த்தைகள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டரில் வைரலாகும் வணங்கான் பட காட்சி
பாலா – சூர்யா இருவரும் 3-வது முறையாக இணைந்த படம் வணங்கான். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த படத்தில் இருந்து சமீபத்தில் சூர்யா வெளியேறினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாலாவு இந்த படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்டதாக கூறயிருந்தார். இதனிடையே வணங்கான் படத்தில் சூர்யா நடித்த காட்சி ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#Vanangaan 😍❤️
— ͏͏ ͏Anbuselvan™🔥 (@Raj_twetz) January 1, 2023
Missed 😣pic.twitter.com/f582g3URvB
கமல்ஹாசனை இயக்கும் தெலுங்கு இயக்குனர்
தமிழ் சினிமாவின் உலகநாயகனான கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் என பிஸியாக நடித்து வரும் நிலையில், அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. கமல்ஹாசனும் ராஜமௌலியும் இது குறித்து ஆலோசனை நடத்தியதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“