பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்களில் வசூல் நிலவரம் குறித்து வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து வாரிசு படத்திற்காக வசூல் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியானது. இரு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், துணிவு படத்தை விட வாரிசு வசூலில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே பொங்கல் பண்டிகை முந்துள்ள நிலையில் விஜயின் வாரிசு படம் வசூலில் சறுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் வெளியானது. 12-வது முறையாக மோதிய இந்த மோதலில், வீரம் ஜில்லாவை மிஞ்சியது என அஜித் கடைசியாக சிரித்துக்கொண்டே ரேஸை முடித்தார்.
தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் மோதினர், அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய படங்கள் வெளியாகியது. இந்த முறை விஜய் முன்னலையில் இருப்பது போல் தெரிந்தது. சாக்னில்க்கின் அறிக்கை படி, துனிவு வெளியாகி 2-ம் வாரத்திற்குள் நுழைந்தபோதும் வசூலில் சரிவை சந்தித்தது.
9ம் நாள் மற்றும் 10வது நாளில், படம் உள்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.2.71 கோடி மற்றும் ரூ.2.4 கோடி வசூலித்தது. இது 8 நாள் வசூலான ரூ. 3.6 கோடி. இதுவரை, துணிவு உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தத்தில் இப்படத்தின் உலக பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.200 கோடியை எட்டியுள்ளது. மறுபுறம், விஜய்யின் வாரிசு இந்தியாவில் ரூ 136.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்று சாக்னில்க் தெரிவித்துள்ளது. 10வது நாளில் 4.15 கோடி வசூல் செய்தது வாரிசு. வாரிசு படத்தின் உலக பாக்ஸ் ஆபிஸ் வசூல் தற்போது சுமார் 220 கோடி ரூபாய்.
வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. இது விநியோகஸ்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இரண்டு படங்களும் பல நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை தக்கவைக்க படம் போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டது. மேலும் இரண்டு படங்களும் வியாபாரத்தில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“