பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் அதே நாளில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படத்தை விட வசூலில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய் அஜித் இருவருக்கும் முக்கிய இடம் உண்டு. இருவருக்கும் அதிகப்படியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால் இவர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரு படங்களும் வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வாரிசு துணிவு இரு படங்களும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலை வாரி குவித்து வருகிறது. அதே சமயம், அஜித்தின் துணிவு படத்தை விட நடிகர் விஜய்யின் வாரிசு வசூலில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அஜித்தின் துணிவு படம் இரண்டாவது வாரத்தில் வசூலில் சரிவை சந்தித்தது. அதே நேரத்தில் வாரிசு வசூலில் முன்னேறியது.
இது தொடர்பான ஸ்கேனிக் (Sacnilk) வெளியிட்டுள்ள பதிவின்படி, வாரிசு படம் 11 நாளில் தோராயமாக ரூ.6.40 கோடிக்கு மேல் சம்பாதித்தது, அதன் மொத்த வசூலை ரூ.141.70 கோடியாக (தோராயமாக) கொண்டு சென்றுள்ளது. துணிவு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 45.2% சதவீதம், 46.11% பார்வையாளர்களை பெற்றுள்ளதாக புள்ளி விவரம் குறிப்பிடப்படுகிறது.
வாரிசு ஏற்கனவே உலக சந்தையில் ரூ.220 கோடியைத் தாண்டியுள்ளது, இதன் மூலம் 2023-ம் ஆண்டில் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய திரைப்படமாக வாரிசு மாறியுள்ளது. மேலும் தமிழகத்தில் வாரிசு படம் அமோக வெற்றி பெற்றுள்ளது. வாரிசு தனது முதல் வாரத்தில் மட்டும் மாநிலத்தில் ரூ.89 கோடி வசூலித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் துனிவு தமிழகத்தில் ரூ.84 கோடியை வசூலித்துள்ளது.
விஜய் மற்றும் அஜித் படங்கள் மோதுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2014ம் ஆண்டு பொங்கல் சமயத்தில் விஜய் நடித்த ஜில்லா படமும், அஜித்தின் வீரம் படமும் மோதியது. பல ஆண்டுகளாக இவர்களது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இது 12வது முறையாகும். அந்த நேரத்தில், ஜில்லா பின்தங்கிய நிலையில், அந்த சுற்றில் அஜித் வெற்றி பெற்றார்.
இரண்டு படங்களும் பெரும்பாலும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்தியன் எக்ஸ்பிரஸின் (Indianexpress.com) கிருபாகர் புருஷோத்தமன் ஒவ்வொரு படத்திற்கும் ஸ்டார்கள் கொடுத்தார். "வாரிசு என்பது ஸ்ரீமந்துடு, அல வைகுண்டபுரமுலோ, அத்தாரி உள்ளிட்ட பல படங்களின் கலவையாகும்" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இரண்டு படங்களுமே அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“