இசைஞானி இளையராஜா எந்த எதிர் பார்ப்புகளும் இல்லாமல் தனது படத்திற்கு இசையமைத்தார் என வட்டார வழக்கு திரைப்பட இயக்குனர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற டூ லெட் படத்தின் நடிகர் சந்தோஷ் -ரவீனா ரவி நடித்துள்ள படம் "வட்டார வழக்கு". மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் வட்டார வழக்கு பட குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினிர்.
அப்போது படத்தின் இயக்குனர், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறுகையில்,
1985"ல் நடப்பது போன்ற கதை களத்தை கொண்ட இத்திரைப்படம், ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் "வட்டார வழக்கு"என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், கிராமத்து பின்னனியில் இருப்பதால் படத்திற்கு இசையமைக்க இசைஞானியை அணுகினோம். இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ. அவரது இசை இந்தப் படத்துக்குப் பெரிய பலம். என்னிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத போதும், அவர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவரே விரும்பி இந்த படத்திற்கு இசையமைத்தார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நாயகி ரவீனா ரவி பின்னனி குரல்கள் நிறைய பேசி இருந்தாலும் இந்த படத்தில் கிராமத்து பேச்சு வழக்கை பேச, கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருந்தது. சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் நடிகைகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தம் தான் என்றாலும், இது போன்ற கிராமத்து பின்னனி படங்களுக்கு அதுவே பெரிய அனுபவமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“