Advertisment

அப்பாவின் சந்தேகம்: அம்மா அனுபவித்த வலிகள்; திருமணம் பற்றி மனம் திறந்த பழம்பெரும் நடிகை!

76 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பழம்பெரும் நடிகை வென்னிற ஆடை நிர்மலா இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
venniradai Nirmala

பழம்பெரும் நடிகை வென்னிற ஆடை நிர்மலா

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கும் வென்னிற ஆடை நிர்மலா தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளாத நிலையில், இவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து பல நேர்காணல்களில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சென்னிற ஆடை நிர்மலா என்ன பதில் கூறியுள்ளார்?

Advertisment

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1965-ம் ஆண்டு வெளியான படம் வென்னிற ஆடை. ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். இதில் நிர்மலா வென்னிற ஆடை நிர்மலா என்றும், மூர்த்தி வென்னிற ஆடை மூர்த்தி என்றும் அழைக்கப்பட்டார். இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவின் பழம்பெரும் கலைஞர்களாக வலம் வருகின்றனர்.

வென்னிற ஆடை நிர்மலா, எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ள வென்னிற ஆடை நிர்மலா, தனது அண்ணன் விபத்தில் மரணமடைந்ததால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

அதன்பிறகு தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ், மற்றும் மனோராமா ஆகியோர் அவரை மீண்டும் நடிக்க தூண்டியுள்ளனர். இதனையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வென்னிற ஆடை நிர்மலா, பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், தற்போது 76-வயதாகவும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வரும் அவரிடம், திருமணம் குறித்து கேள்விகள் கேட்கப்படுவதும் அதற்கு அவர் பதில் சொல்வதும் வழக்கமாக இருக்கிறது.

அந்த வகையில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில், நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த வென்னிற ஆடை நிர்மலா, எனது அப்பா எவ்வளவு ஸ்ரிக்ட் என்று சொல்கிறேனோ, அதே அளவு சந்தேக புத்தியுடன் இருப்பவர். எனது அம்மா வாழ்நாளில் கடைசி வரை எனது அப்பாவின் சந்தேகத்தால் கடுமையான தொல்லைகளை அனுபவித்து வந்தார்.

நானும் திரைத்துறையில் நடிக்கிறேன். நடனமாடுகிறேன். எனக்கும் இப்படி யாராவது வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். பல நடிகர்கள், நான் இப்படி எதுவும் செய்ய மாட்டேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு திருமணம் செய்துகொள்ளட்டுமா என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன் என்று பதில் அளித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment