ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisment
ஜெயிலர் படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். எண்கவுண்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன், அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சுவாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படம், அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தின் இறுதிக்கடட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் மனசிலாயோ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisment
Advertisement
சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு இடவன் எழுதியுள்ள இந்த பாடலை, யுகேந்திரன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோருடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாடகர் மலேசிய வாசுதேவன் குரல் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வேட்டையன் படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் அப்டேட்கள் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“