பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10) வெளியாகி உள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கியுளள இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
ஆயுதபூஜையை முன்னிட்டு, இன்று வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின், முன்பதிவு டிக்கெட் புக்கிங்கில் இப்படம் ரூ.7 கோடி வசூல் செய்துள்ள நிலையில் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. எம்.ஜே கார்டெல் என்ற ஒரு நபர் தனது எக்ஸ் பக்கத்தில், படத்தின் பிரீமியர் ஷோவைப் பார்த்ததாகவும், அனைவரும் பார்ப்பதற்கு தகுதியான படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்து, "வேட்டையன் விமர்சனம்: முதல் அறிக்கைகள் சூப்பர் தீம், நடிப்பு அடிப்படையிலான படம் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் ஆதிக்கம் செலுத்திய படம். ஃபஹத்பாசில் மற்றும் ராணா கேரக்டர் நன்றாக உள்ளது. பேச்சு இடைவெளி, படத்தின் 2வது பாதி ஹைலைட். ஒரு செய்தியுடன் நல்ல திருப்பம்" என்று பதிவிட்டுள்ளார்.
'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் ஒரு போலீஸ்காரராக என்கவுன்டர் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் ட்ரெய்லர் ரஜினி மோசமான போலீஸாகவும், அமிதாப் பச்சன் நல்ல போலீஸாகவும் இருக்கும் நிலையில்,இவர்களுக்கு இடையிலான மோதல் தான் படமாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியது. இப்படம் உயர் ஆக்டேன் ஆக்ஷன் சீக்வென்ஸ் மற்றும் கவனம் ஈர்க்கும் கதைக்களம். முதல் நாள் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 125 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நீண்ட வார இறுதி மற்றும் தசரா விடுமுறை என்பதால் முதல் வார இறுதியில் படம் 250 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்ததோடு, 'ஜெய் பீம்' இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் ஒரு வித்தியாசமான ஆக்ஷன் டிராமா திரைப்படத்திற்கு உறுதியளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“