இளையராஜா இசையில் பாட மறுத்த நடிகை… விஜய் மகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : டாப் 5 சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

tamil Cinema
இளையராஜா – விஜய்

உதவி இயக்குனர்களுக்கு பரிசளித்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் இயக்கத்தில் தயராகியுள்ள விடுதலை படம் வரும் மார்ச் 31-ந் தேதி வெளியாக உள்ளது. சூரி முதன் முதலாக கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விடுதலை படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு 25 பேருக்கு இயக்குனர் வெற்றிமாறன் செங்கல்பட்டு அருகே உத்திரமேரூர் பகுதியில் தலா 1 கிரவுண்ட நிலத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

இளையராஜா இசையில் பாட மறுத்த நடிகை

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தில் வரும் ஒரு பாடலை பாடுவதற்காக நடிகையும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கையுமான பவானிஸ்ரீயிடம் கேட்டுள்ளார். ஆனால் தான் இசை குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்று கூறி வாய்ப்பை மறுத்துள்ளார். விடுதலை படத்தில் பவானி ஸ்ரீ சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை டாப்சி மீது புகார்

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக நடித்து வரும் நடிகை டாப்சி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் டாப்சி கவர்ச்சியாக உடையில், அம்மன் உருவம் பதித்த நெக்லஸை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், டாப்சி மதஉணர்வை புண்படுத்திவிட்டதாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மகன் இயக்கும் குறும்படம்

நடிகர் விஜய் நடித்த வேட்டைககாரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய அவரது மகன் சஞ்சய் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ள சஞ்சய் தற்போது புதிதாக ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார். இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஃபுல் தி ட்ரிகர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் – வெற்றிமாறன் படம் எப்போது?

டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தமிழ். இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், அசுரன் ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விஜய் வெற்றிமாறன் இணையும் படம் குறித்து பேசியுள்ள அவர், இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த கூட்டணி இணையும் என்று கூறியுள்ளார். தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema viduthalai and vijay son movie first look update

Exit mobile version