சிம்புவுக்கு போட்டியாக வெற்றிமாறன்… பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா : டாப் 5 சினிமா

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையில், தற்போது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Tamil Cinema
வெற்றிமாறன் சிம்பு பிரதீப் ரங்கநாதன் நயன்தாரா

சிம்பு 48 நாயகி இவரா?

வெந்து தனிந்தது காடு படத்திற்கு பின் நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 30-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், சிம்பு அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக எஸ்டிஆர் 48 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தில், நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா மற்றும் திஷா படானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையில், தற்போது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் சமீபத்தில் வெளியாகி பெரிய வசூல் வேட்டை நடத்திய லவ்டுடே படத்தின நாயகன் பிரதீப் ரங்கநாதனுடன் இணைகிறார். இந்த படத்தில் நடிரக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக இல்லாமல் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

லியோவை தொடர்ந்து அட்லி படத்தில் சஞ்சய் தத்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இவரது காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது சஞ்சய் தத் இணைந்துள்ளார்.

சிம்புவுக்கு போட்டியாக வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் விடுதலை. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் மார்ச் 31-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒருநாள் முன்னதாக மார்ச் 30-ந் தேதி சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கர்ணன் கூட்டணி

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாரி செல்வராஜ் அடுத்து மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படம் தனுஷுன் 51-வது படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தனுஷுன் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema viduthalai movie release march 31 and nayanthara vs pradeep

Exit mobile version