வாகனங்களில் ஒட்டப்படும் போஸ்டகளில் விதி மீறல் இருப்பதாக கூறி அஜித் விஜய் ரசிகர்கள் பரஸ்பரம் புகார் அளித்து வருவது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருக்கும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களை பெற்றுள்ள நிலையில், இவர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் அதனை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய படங்கள் ஒன்றாக வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் முழுதாக ஒரு மாதம் உள்ள நிலையில், அஜித் விஜய் ரசிகர்கள் இப்போதே தங்களது அஸ்தான நாயகனின் படங்களுக்கான ப்ரமோஷனை தொடங்கிவிட்டனர்.
இதில் பெரும்பாலான ரசிகர்கள் தங்களது வாகனங்கில் படத்தின் போஸ்டர்களை ஒட்டி விளம்பரம் செய்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஜில்லா, அஜித் நடிப்பில் வீரம் ஆகிய இரு படங்களும் ஒன்றாக வெளியானது. அதன்பிறகு 8 வருட இடைவெளிக்கு பிறகு அஜித் விஜய் படங்கள் ஒன்றாக வெளியாகதால் ரசிகர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனால் வாரிசு பொங்கலா? அல்லது துணிவு பொங்கலா? என இரு தரப்பு ரசிகர்களிடையே பெரிய போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் ஒட்டப்படும் போஸ்டர்களில் விதி மீறல்கள் உள்ளதாக கூறி இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகார்கள் குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ள போக்குவரத்து காவல்துறை விதி மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் நடிகர் அஜித் ஆகியோர் இணையும் 3-வது படம் துணிவு. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. அதேபோல் விஜய் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். வாரிசு படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil