வாரிசு படத்தில் நடிகர் ஷாமின் சம்பளம்
விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியான படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கிய இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். குடும்ப கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜயின் 2-வது அண்ணனாக நடித்திருந்தவர் நடிகர் ஷாம். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஷாம் ரூபாய் ஒரு கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனியின் பரிதாப நிலை
பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் ஆண்டனியின் நடிப்பு இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிச்சைக்காரன் 2 படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ரத்தம், வள்ளிமயில், கொலை, மழை பிடிக்காத மனிதன், உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், இந்த படங்களின் சேட்லைட் உரிமையை எந்த நிறுவனமும் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
டாடா படத்தின் மொத்த வசூல்
விஜய் டிவி சீரியல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் பீஸ்ட் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அபர்னா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாடா. காதல் மற்றும் குழந்தை வளர்ப்பை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதுவரை 12 கோடிரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து உடையில் அஜித் மகன்
முன்னணி நடிகரான அஜித் நடிகை ஷாலினியை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதனிடையெ அஜித் மகன் ஆத்விக் கால்பந்து உடையில் அம்மா ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடி வரும் சென்னையின் எப் சி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
மெரினா அரீனாவில் அலைபாயுதே 😉💙#AllInForChennaiyin pic.twitter.com/Cja4Uw2uIH
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) February 24, 2023
வசூலில் சாதனை படைக்கும் வாத்தி
தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி வெளியான படம் வாத்தி. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தனுஷ்க்கு பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்துள்ளது. மேலும் வாத்தி படம் ஒரு வாரத்தில் 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil