விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருளாளினி ரவி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ரோமியோ படத்தின் விமர்சனம்
கதைக்களம் :
மலேசியாவில் வேலை பார்த்து வரும் விஜய் ஆண்டனி சொந்த ஊர் திரும்பும் நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் மிருளாளினி ரவியை விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் இதில் மிருளாளினிக்கு துளி கூட இஷ்டமில்லை. தன் மனைவிக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த விஜய் ஆண்டனி, தன்னை மிருளாளினிக்கு பிடித்த மாதிரி மாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதை ரொமான்டிக் காமெடி கலந்து சொல்லி இருக்கும் படமே ரோமியோ.
நடிகர்களின் நடிப்பு
சமீப காலமாக தொடர்ந்து சீரியஸ் ரோலில் நடித்து வரும் விஜய் அண்டனி இப்படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்படைய செய்திருக்கிறார். தன்னால் இதுபோன்ற ஜானர் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். மிருளாளினி ரவிக்கு இப்படத்தில் சற்று கனமான கதாபாத்திரம், அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இவர்களை தவிர யோகிபாபு, விடிவி கணேஷ், ஷாரா ஆகியோரின் கேரக்டர்களும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இயக்கம் மற்றும் இசை
தற்போதைய காலகட்டத்தில் பிடிக்காமல், ஒரு சில சூழ்நிலைகளால் திருமணம் செய்தவர்களுக்கு இப்படம் ஒரு புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வையும் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். பரத் தனசேகரனின் இசை இப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் பிளஸ் :
ஃபருக் ஜே பாட்ஷாவின் அழகான ஒளிப்பதிவு
மென்மையான திரைக்கதை
கல்யாண காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள்
நகைச்சுவை காட்சிகள்
எமோஷனல் காட்சிகள்
நடிகர்களின் எதார்த்த நடிப்பு
பின்னணி இசை
படத்தின் மைனஸ் :
சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்
பாடல்கள்
மொத்தத்தில் இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று ரசிக்கும்படியான ஒரு பீல் குட் படமாக முடிகிறது இந்த "ரோமியோ"
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil